Category: ஏகதிபத்தியம்
ஜூலை 30 தியாகிகள் தினம் : வர்க்கப் போராட்டத்தின் வழிகாட்டி
புதுச்சேரி. வெ. பெருமாள் ஜூலை 30 தியாகிகள் தின நிகழ்வுகள், புதுச்சேரி பஞ்சாலை தொழிலாளி வர்க்கத்தின் எழுச்சிமிகு போராட்டத்தின் வீரகாவியமாகும். 88 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1936 ஜூலை 30இல் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் சுழல் பீரங்கிக்கு 12 பஞ்சாலைத் தொழிலாளர்கள் இரையாகி, தெற்காசியாவில் முதன்முதலில் 8 மணி நேர வேலை உரிமையை பெற்றிட்ட வரலாற்று நிகழ்வு அது. சுரண்டலையும், ஏகாதிபத்தியத்தையும் ஒரு சேர எதிர்த்திட்ட எழுச்சிமிகு வர்க்க போராட்டத்தின் அடையாளமும் ஆகும். பிரெஞ்சு ஏகாதிபத்தியம் வருகை
சோசலிச கியூபாவை கொண்டாடுவோம்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் நாம் வாழ்ந்துவரும் 21ஆம் நூற்றாண்டு மானுட இனத்தின் எதிர்காலம் பற்றிய பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த நூற்றாண்டின் முதல் கால் பாகம் நிறைவடைய இன்னும் 18 மாதங்கள் கூட இல்லை. எனினும் மானுடத்தின் எதிர்காலம் பற்றிய மிகுந்த கவலையுடன், இந்த காலகட்டத்தில் சுற்றுச் சூழல், புவி வெப்பமயமாதல், பருவ/கால நிலை மாற்றம் போன்ற பிரச்சினைகள் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. இவை எல்லாம் முக்கியம் என்றாலும், சமகாலத்தில் இயற்கையையும், மானுடத்தையும், தனது லாப
ஏகாதிபத்தியத்தை எதிர்த்த பாலஸ்தீன விடுதலைப் பயணம்!
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் 1988 நவம்பர் 15 அன்று பாலஸ்தீன விடுதலை இயக்கம், இறையாண்மை பெற்ற பாலஸ்தீன நாடு அமைந்துள்ளது என அறிவித்தது. வரலாற்றில் பாலஸ்தீனம் என்று அறியப்பட்ட பகுதியில், 1967இல் இஸ்ரேல் நாடு ஆக்கிரமித்துக்கொண்ட பகுதியான கிழக்கு ஜெருசலம் உட்பட உள்ள ஜோர்தான் நதியின் மேற்குக் கரை மற்றும் காஜா பகுதி ஆகியவை இதில் அடங்கும். இவை பாலஸ்தீனத்தை சேர்ந்தவை என்பது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். 1988 ஆண்டு இறுதிவரை 78 நாடுகளால் பாலஸ்தீனம்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
