Category: அரசியல்
வைக்கம் 100 : போராட்டக் களம் தரும் பாடங்கள் !
போராட்டம் பற்றிய பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்த காந்தியாரும் கூட வைக்கம் மகாதேவர் ஆலையத்தை நிர்வகித்த இண்டம்துருத்தி மனைக்கு உள்ளே அனுமதிக்கப்படாத செயலும் நடந்தேறியது. ஆலையத்தைச் சுற்றிலும் இருந்த பொது வழியை அனைவரும் பயன்படுத்த உரிமை வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. காந்தியாரை அனுமதிக்க மறுத்து அவமதித்த அந்த மனை தற்போது ‘கள் இறக்கும் தொழிலாளர்களுடைய சங்கத்தின்’ அலுவலகமாக செயல்படுகிறது. வரலாறானது முன்னோக்கியே நகரும் என்பதற்கான முன்னுதாரணம் இது.
2023-24: தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து
பட்ஜெட்டில் எந்த திசைவழியில் தமிழக பொருளாதாரம் செல்லவேண்டும், மக்கள் வாழ்வில் முன்னேற்றத்திற்கான பாதை எது, வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு ஆகிய முக்கிய பிரச்சினைகளில் பட்ஜெட் எத்தகைய பங்கு ஆற்ற முடியும் போன்ற கேள்விகள் குறித்து ஆழமான சிந்தனைகள் எதுவும் பட்ஜெட்டில் வெளிப்படவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமான சில ஒதுக்கீட்டு மாற்றங்கள், கவனம் ஈர்க்கும் ஓரிரு சேமநல திட்டங்கள் என்ற வகையில்தான் பட்ஜெட் அமைந்துள்ளது. மாநிலத்தின் வளர்ச்சி பற்றியோ, மக்கள் சந்திக்கும் வாழ்வாதார சவால்கள் பற்றியோ எந்த ஒரு தொலை நோக்கு பார்வையும் இல்லாத, ஃபிஸ்கல் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு, செலவுகளை சுருக்கி எப்படியோ சமாளிப்பது என்ற பாணியில் பட்ஜெட் அமைந்திருப்பதால், மாற்று சிந்தனைகளுக்கு, முனைவுகளுக்கு இடமே தராத, ‘திக்கு தெரியாத காட்டில் பயணம்’ போலவே நிதி அமைச்சர் பயணித்துள்ளார்.
லெனினும் இயங்கியலும்
லெனின் ஒரு புரட்சியாளர். உலகத் தலைவர். ஆனால், இந்த வண்ணமிகு புகழாரங்களைத் தாண்டி, அவர் “மார்க்சிய தத்துவத்தை செயலில் நிறுவிக் காட்டியவர்” என்பதுதான் நமக்கு முக்கியமான படிப்பினையாக இருக்கும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
