
இந்துத்துவாவும் ‘இந்து’ பெருமுதலாளித்துவமும்
பிரகாஷ் காரத்
(மார்க்சிஸ்ட் ஜூலை இதழில் நமது வாசகர்களின் சில கேள்விகளுக்கு தோழர் பிரகாஷ் காரத் பதிலளித்திருந்தார். அதன்மீது வந்த ஒரு கேள்வியை அவருக்கு அனுப்பியிருந்தோம். அவரது பதில் கீழே தரப்பட்டுள்ளது. – ஆசிரியர் குழு)
தெளிவுக்கான கேள்வி: சென்ற இதழில் உங்கள் பதிலில், இந்துத்துவா சித்தாந்தம் “ஒரு குறிப்பிட்ட வழியில் ‘இந்து’ பெருமுதலாளித்துவத்தை ஊக்குவிக்கிறது” என்றும், ஆர்எஸ்எஸ்-இன் இந்து ராஷ்டிரக் கருத்து “ஒரு சக்திவாய்ந்த இந்து முதலாளித்துவ ஆதிக்க அமைப்பை அடிப்படையாகக் கொண்டது” என்றும் குறிப்பிட்டீர்கள். இதைப்பற்றி மேலும் விளக்கினால் மிகவும் உதவியாக இருக்கும்.
பதில்: ‘இந்து’ பெருமுதலாளித்துவம் மற்றும் ஒரு “சக்திவாய்ந்த இந்து முதலாளித்துவ ஆதிக்கம்” பற்றிய குறிப்புகள், இந்துத்துவா-கார்ப்பரேட் கூட்டின் தன்மை மற்றும் ஆர்எஸ்எஸ்-இன் இலக்கான இந்து ராஷ்டிரத்தின் வர்க்க தன்மையை தெளிவுபடுத்துவதற்காக சொல்லப்பட்டன.
ஆர்எஸ்எஸ் பரப்பும் இந்துத்துவா சித்தாந்தம், முதலாளித்துவ சார்பு மற்றும் பெருமுதலாளிகளின் நலன்களுடன் முழுமையாக ஒத்துப்போகிறது. ஆர்எஸ்எஸ் “இந்து சமூகத்திற்கு” தான் சேவை செய்வதாக பிரச்சாரம் செய்தாலும், அது உண்மையில் இந்து பெருமுதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் நலன்களுக்குத்தான் சேவை செய்கிறது; சாதாரண இந்து தொழிலாளி அல்லது விவசாயியின் நலன்களுக்கு அல்ல. அதனால்தான் இந்துத்துவா சித்தாந்தம் ‘இந்து’ பெருமுதலாளிகளை ஊக்குவிக்கிறது என்று கூறப்படுகிறது.
இந்து ராஷ்டிரத்தைப் பொறுத்தவரை, அதன் வர்க்க சாரம் ஒரு பெருமுதலாளிகள் தலைமையிலான அரசு என்பதைப் பற்றி எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது. இந்த பெருமுதலாளிகள் பெரும்பாலும் இந்துக்கள் (ஜைனர்கள் இந்து மதத்தின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறார்கள்). அம்பானி, அதானி மற்றும் பிற முக்கிய பெரிய வணிக அதிபர்கள் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பை வரவேற்றனர்; கட்டுமானத்திற்காக தாராளமாக நிதி வழங்கினர்.
இந்து அல்லாத பெரிய வணிகக் குழுமங்கள் இருந்தால், அவை டாடா (பார்சி வம்சாவளி) குழுமத்தைப் போல இருக்கும் – அதாவது அவர்கள் ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவாவுடன் சமரசம் செய்துகொண்டனர். இதுவே இந்துத்துவா-கார்ப்பரேட் கூட்டணியின் தன்மை.
You may also like
1 comment
Comments are closed.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

அன்னிய முதலாளிகளயும் இந்துத்துவ சக்திகள் ஆதரிக்கிறது.