இட ஒதுக்கீடு ஏன் எவ்வாறு?
இட ஒதுக்கீடு முன்னேறியசாதியிலுள்ள ஏழைகளின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்படவில்லை; மாறாக முன்னேறியசாதியினர் எட்டியிருக்கும் சமூக, பொருளாதார, கலாச்சார மட்டத்தின் அளவிற்கு ஒடுக்கப்பட்ட சாதியினரையும் முன்னேற்றுவதுதான் இடஒதுக்கீட்டின் நோக்கம்.
சிங்காரவேலரின் மார்க்சியப் பார்வை
என்.குணசேகரன் மானுட விடுதலைக்கு வழிகாட்டுகிற தத்துவம் மார்க்சியம். காரல் மார்க்ஸ் பிறந்து இருநூறு ஆண்டுகள் ஆன இன்றைய பின்னணியில் சிங்கரவேலரின் மார்க்சிய சிந்தனை தமிழக சிந்தனைப் பரப்பில் முக்கியத்துவம் வாய்ந்தததாக உள்ளது, அது இன்றைக்கும் பொருத்தப்பாடு கொண்டதாகவும் உள்ளது. இந்திய விடுதலை இயக்கத்தின் முன்னணித் தலைவர், தென்னகத்தின் முதல் கம்யூனிஸ்ட் இயக்கப் போராளி,தொழிலாளர் இயக்கங்களையும், தொழிலாளர் போராட்டங்களையும் தலைமையேற்று நடத்திய தலைவர் ,மிகச்சிறந்த அறிவியல் பரப்புரையாளர், சுயமரியாதை இயக்கத்தின் கருத்தியல் செயல்பாட்டாளர் என பன்முகத் தளங்களில் பணியாற்றியவர்
தோற்கடிக்கப்பட்ட புரட்சியின் படிப்பினைகள்
தமிழில்: பாலச்சந்திரன் 26 ஆகஸ்ட் 1849 ல், மார்க்ஸ் ஆங்கிலேய மண்ணில் காலடி வைத்தபொழுது லண்டன் மாநகரம், இருபது லட்சத்திற்கும் மேலான மக்கள்தொகை கொண்டதாகவும்,உலகிலேயே மிகப் பெரிய நகரமாகவும், உலகின் ‘தொழிற்பட்டறை’யாகவும், வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாட்டின் தலைநகரமாகவும் விளங்கியது. 1848 ம் ஆண்டின் வசந்த காலத்தில், அடிப்படை ஜனநாயக உரிமைகளின் விரிவாக்கத்திற்காக, சார்டிஸ்ட் இயக்கம் மாபெரும் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்த பொழுது, ஐரோப்பிய புரட்சி, இங்கிலாந்தின் கதவுகளையும் தட்டிக் கொண்டிருந்தது. ஆனால், அந்த இயக்கம் மிகப் பெரிய
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
