Category: சாதி
ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கும் ‘தர்மம்’, சாதியை ஒழிக்குமா?
இரா.சிந்தன் “சாதி முறை ஒரு காலத்தில் இருந்தது; ஆனால், இன்று அதற்கு எந்தப் பொருத்தமும் இல்லை. சாதி என்பது இனி ஒரு முறை அல்ல; அது காலாவதியானது, அது போக வேண்டும்… காலாவதியான முறை நீக்கப்படும்போது, அது சமூகத்தின் மீது அழிவு விளைவிக்கும் தன்மை கொண்டிருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்” இவ்வாறு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாக்வத் பேசியுள்ளார். அதைத் தொடர்ந்து, பாஜகவின் பல தலைவர்களும், ஊடகங்களில் பேசும் ஆதரவாளர்களும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சாதிகளை ஏற்கவில்லை
சாதியும் வர்க்கமும்
முதலாளித்துவ நிலைக்கு முந்தைய அமைப்பான நிலப்பிரபுத்துவ பொருளாதார அடித்தளத்தின்மீது கட்டப்பட்ட கட்டமைப்பே சாதீய முறையாகும். அதாவது, அன்றைக்கு நிலவிய நிலம் சம்பந்தப்பட்ட உறவின் அடிப்படையிலேயே, சாதீய உறவுகள் ஆளும் வர்க்கங்களாலும் அவர்களின் தத்துவகர்த்தாக்களாலும் உருவாக்கப்பட்டது. அந்த நில உறவில் அடிப்படை மாற்றம் நிகழாமல், சாதீய அமைப்பில் அடிப்படை மாற்றம் சாத்தியம் இல்லை என்பதே உண்மை.
பள்ளிகளில் தீண்டாமை: சீரழிந்த வடிவத்தின் மீது கட்டப்படும் நவீனம்
கல்வி, சமூக, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையில் உள்ள வட மாநிலங்களில் நடைபெறும் சாதிக் கொடூரங்களை விளங்கிக்கொள்ள முடிகிறது. சமூக சீர்திருத்த இயக்கங்கள் நீடித்து நிலைத்த தமிழ்நாட்டில், சாதி ஆணவப் படுகொலைகள், கல்வி நிலையங்களில் சாதியப் பாகுபாடு, தாக்குதல்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்கள் போன்றவை நீடிப்பது நாம் பயணிக்க வேண்டிய தூரத்தை உணர்த்துகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



