Category: வரலாறு
தமிழகத்தில் பொருள் முதல்வாதத்தின் சருக்கலும், வைதீக ஆக்கிரமிப்பும்!
இரா.சிந்தன் தமிழகத்தில் நிலவிய குடிவாழ்க்கையில், முன்னிலைப் பொருள்முதல்வாத நோக்கு நிலவியது. தொன்ம நம்பிக்கைகளும் உருவாகின. இவை உலகம் முழுவதும் நிலவக்கூடிய இயல்பான போக்குதான். தமிழ் இலக்கியங்களின் தொன்மையின் காரணமாக, ஆதிச் சமூகத்தின் தத்துவங்கள் அதன் இலக்கணத்திலும், கட்டமைப்பிலும், கலாச்சார வாழ்க்கையிலும் தொடர்ந்ததை பார்த்தோம். அதன் பின்னர் வர்க்க சமுதாயத்தில் தத்துவப் போக்கில் சில சருக்கல்கள் ஏற்பட்டிருந்தாலும், சுமார் 1500 ஆண்டுகள் தமிழர் இலக்கியங்களின் தத்துவ நோக்கில் பொருள் முதல்வாத பார்வைக்கு முக்கிய இடம் இருந்ததை தேவ பேரின்பன்
வெண்மணியின் குரலாய் சட்டமன்றத்தில் சங்கரய்யா
கீழ்வெண்மணி படுகொலை தொடர்பாக “தஞ்சை மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு தவறியது; கீழ்வெண்மணி கிராமத்தில் தீவைப்பால் பலர் உயிரிழந்தது குறித்த அமைச்சரவையின் கொள்கையைக் கண்டிக்கும்” ஒரு கண்டனத் தீர்மானத்தை , காங்கிரஸ் கட்சி முன்மொழிந்தது. அதன் மீது 1969 பிப்ரவரி 28 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், தோழர் சங்கரய்யா ஆற்றிய உரையை வெண்மணி நினைவு தினத்தை ஒட்டி இங்கு பிரசுரிக்கிறோம். – ஆசிரியர் குழு திரு. என். சங்கரய்யா :
தமிழகத் தத்துவ வேர்களும், மாற்றப் போக்குகளும் !
இரா. சிந்தன் தேவ. பேரின்பன் எழுதியுள்ள “தமிழர் வளர்த்த தத்துவங்கள்” என்ற நூல், அவரது மறைவுக்கு பின் 2014ஆம் ஆண்டில் அச்சாக்கம் பெற்றது. இறுதிக் காலத்தில் அவர் எழுதி முடிக்க முயன்றிருந்த இந்த நூலில், தமிழ்நாட்டு தத்துவங்களின் வேர்களையும், மாற்றப்போக்குகளையும் மார்க்சிய பார்வையில் ஆய்வு செய்துள்ளார். இந்திய பொருள் முதல்வாதத்தின் வரலாற்றை மீட்டெடுத்த அறிஞர் தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவின் தடம் பற்றி, தமிழகத்திலும் அந்தத் தேடலை விரிவாக்கிட வேண்டியுள்ளது. அவ்வகையில் பழந்தமிழர் இலக்கியங்களில் பதிவாகியுள்ள பொருள்முதல்வாத தத்துவங்களைப்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
