Author: Editorial
காஸ்த்ரோ நூற்றாண்டை நோக்கி…கூபாவின் விடுதலை: காஸ்த்ரோ முன்வைத்த ஜூலை 26 இயக்கத்தின் திட்டங்கள்
சமகால உலகில் 65 ஆண்டுகளாக அமெரிக்க வல்லரசின் அனைத்து தாக்குதல்களையும் முறியடித்து தனது சோசலிச அமைப்பை பாதுகாத்து முன்னேறி வரும் கூபப் புரட்சியின் வரலாற்றில் 1953 ஆம் ஆண்டு ஜூலை 26 என்பது மிகவும் முக்கியமான நாள். அன்றுதான் பாடிஸ்டா என்ற சர்வாதிகாரியின் ஆதிக்கத்தில் இருந்த மக்களை விடுவிக்க போராடிக் கொண்டிருந்த கூபாவின் இளம் முற்போக்கு சக்திகளான ஜூலை 26 இயக்கத்தினர் கூபா அரசின் ராணுவ தளங்களில் முக்கியமான ஒன்றான மான்கடா முகாமின் மீது ஆயுதம் தாங்கிய தாக்குதலை மேற்கொண்டனர். அத்தாக்குதல், பாடிஸ்டாவின் படைகளால்
கேரளா LDF அரசாங்கத்தின் சாதனைகளும் சந்திக்கும் சவால்களும்!
உலக அளவிலும் சரி; இந்திய அளவிலும் சரி; தாரளமய கொள்கைகள் தீவிரமாக அமலாகும் சூழலில் அதற்கு எதிரான திசைவழியில் கேரளாவின் LDF அரசாங்கம் செயல்படுவது மட்டுமல்ல; பல வரையறைகள் இருந்தாலும், அவற்றையும் மீறி மாற்று பொருளாதார சமூக கொள்கைகளை LDF அரசாங்கம் அமலாக்குகிறது. LDFஇன் இந்த கடும் போராட்டம் இரு கூறுகளை கொண்டது. ஒன்று, LDF அரசாங்கத்தின் நிர்வாக ரீதியான, சட்ட ரீதியான தலையீடுகள் எனில், இன்னொன்று உழைப்பாளி வர்க்கப் போராட்டங்கள்.
இந்திய மார்க்சிய ஆய்வின் முன்னோடி டி.டி. கோசாம்பி
அன்வர் உசேன் டி.டி.கோசாம்பி என அழைக்கப்படும் தாமோதர் தர்மானந்த் கோசாம்பியின் நினைவு தினம் ஜூன் மாதம் 29 ஆகும். 1907ஆம் ஆண்டு ஜூலை 31இல் பிறந்த அவர் 1966ஆம் ஆண்டு 60 வயதை நிறைவு செய்வதற்கு முன்பே இறந்தார். இந்திய வரலாற்றை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்து முன்வைத்ததில் அவர் முன்னோடி எனில் மிகை அல்ல. இந்திய வரலாற்றை பொருள்முதல்வாத அடிப்படையில் கற்பதற்கு கோசாம்பியின் எழுத்துகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன என தோழர் இ.எம்.எஸ். குறிப்பிடுகிறார்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
